சீனா ஓபன் டென்னிஸ் தொடரில், கார்லஸ் அல்காரஸ் மற்றும் காரென் கச்சனா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவில் நடைபெற்று வரும் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், டச்சு வீரரான கிரீக்ஸ்பூரை 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மேலும், ரஷிய வீரர் காரென் கச்சனாவும், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவை 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.