சீன மக்கள் தொகை 2ம் ஆண்டாக சரிவு - இந்தியா தொடர்ந்து முதலிடம்

January 18, 2024

சீனாவின் மக்கள் தொகையில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, தொடர்ந்து 2வது ஆண்டாக, உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருந்தது. தற்போது, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இது 140.9 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாகவும், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது காரணமாகவும், மக்கள் தொகை சரிவடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய […]

சீனாவின் மக்கள் தொகையில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, தொடர்ந்து 2வது ஆண்டாக, உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருந்தது. தற்போது, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இது 140.9 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாகவும், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது காரணமாகவும், மக்கள் தொகை சரிவடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ள அதே வேளையில், கொரோனா காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு முதல், தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu