சீனாவில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

September 14, 2024

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு, சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இம்முதலீட்டின்படி, ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயதுக்கு 60-ல் இருந்து 63, பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை 2025 ஜனவரியில் அமலுக்கு வரும். அடுத்த 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். மேலும், முதியோர் காப்பீட்டு ஊக்குவிப்பு, […]

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு, சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

இம்முதலீட்டின்படி, ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயதுக்கு 60-ல் இருந்து 63, பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை 2025 ஜனவரியில் அமலுக்கு வரும். அடுத்த 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். மேலும், முதியோர் காப்பீட்டு ஊக்குவிப்பு, சட்டபூர்வ ஓய்வூதிய வயதைக் கடந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களை உறுதி செய்தல், முதியோர் மற்றும் குழந்தைப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த திட்டம், சீன மக்களின் சராசரி ஆயுட்காலம், சுகாதார நிலை, மக்கள்தொகை அமைப்பு மற்றும் கல்வி நிலைகளைப் பொறுத்து ஏற்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu