சீனாவின் போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் நுழைந்தது என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வப்போது தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. எனினும், சீனா தங்களை தாக்கினால் பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தைவான் எல்லைக்குள் சீனாவின் 22 போர் விமானங்கள் மற்றும் எட்டு போர் கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 15 விமானங்கள் எல்லையை தாண்டி தைவானுக்குள் பறந்ததாக கூறப்படுகிறது. இதனால் வான் மற்றும் கடல் எல்லை பகுதியை ரோந்து பணி மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.