நெடு நாட்களாக நீடிக்கும் வெப்ப அலையால், நெல் மற்றும் பருத்தி தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் சாகுபடி பாதித்து, பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சீனாவின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில மாதங்களுக்கு சீனாவின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை காணப்படும். பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 1.7 முதல் 2.8 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட கூடுதலாக பதிவாகும். இதனால் தொடர்ச்சியாக மற்றொரு கோடை காலம் நிலவுவது போன்ற சூழல் ஏற்படுகிறது. இத்தகைய அசாதாரண சூழலால் ஏற்படும் வெப்பம் வெப்பநிலை உயர்வால், பயிர் சாகுபடி பாதிக்கப்படும். குறிப்பாக, நெல் மற்றும் பருத்தி உற்பத்தி பாதிக்கப்படுவதால் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிகழலாம். - இவ்வாறு சீன வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.