சீனாவில் உள்ள சின்சியாங் மாகாணத்தில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வியாழன் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 109 நாட்களாக அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தரைத்தளத்தில் உள்ள கதவுகள் அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்ததால், கட்டிடத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் இருந்தவர்கள் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்ப முயன்ற நிலையில், பலரும் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், தீயை முழுமையாக அணைப்பதற்கு 2.45 மணி நேரம் ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால், அதிகமான கார்கள் கட்டிட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைத் தாண்டி தீயணைப்புத் துறையினர் உள்ளே வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இப்பகுதி மக்கள் கொரோனா கட்டப்பாடுகளை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.