உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை, பூமியின் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அணையில் சேமிக்கப்பட்டுள்ள 40 கன கிலோமீட்டர் தண்ணீர், பூமியின் நிரையை மாற்றி, அதன் சுழற்சியை மிகச் சிறிய அளவில் பாதிக்கிறது. நாசாவின் கணக்கீடுகள் படி, இந்த மாற்றத்தால் பூமியின் ஒரு நாள் 0.06 மைக்ரோ விநாடிகள் நீள்கிறது மற்றும் பூமியின் துருவங்கள் சில சென்டிமீட்டர் அளவு நகர்கின்றன.
இது தவிர, காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் இதேபோன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, பூமத்திய ரேகையை சுற்றி அதிக அளவு நீர் குவிவதால், பூமியின் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் பூமியின் நாட்கள் நீண்டு வருகின்றன.