தைவான் எல்லைக்குள் சீன விமானங்கள் முற்றுகை

June 14, 2024

ஒரே நாளில் தைவான் எல்லையில் சீனாவின் 7 போர் கப்பல்கள் மற்றும் 23 போர் விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. தைவானை தங்களுடைய ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருவதால் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் சீனாவின் கோபம் மேலும் அதிகரித்து தைவான் எல்லையில் அவ்வப்போது போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தைவானில் கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி […]

ஒரே நாளில் தைவான் எல்லையில் சீனாவின் 7 போர் கப்பல்கள் மற்றும் 23 போர் விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன.

தைவானை தங்களுடைய ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருவதால் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் சீனாவின் கோபம் மேலும் அதிகரித்து தைவான் எல்லையில் அவ்வப்போது போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தைவானில் கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் லாய் சிங் தே மற்றும் சீன ஆதரவு பெற்ற ஹவ் யோ ஹி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று லாய் அதிபரானார். இதையடுத்து சீனா மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரே நாளில் தைவான் எல்லையில் 7 போர் கப்பல்கள் மற்றும் 23 போர் விமானங்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அவற்றில் 19 விமானங்கள் எல்லை தாண்டி தைவானுக்குள் பறந்து சென்றது. சீனாவின் இந்த செயலுக்கு தைவான் அதிபர் லாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu