பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

August 21, 2023

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில், 15 வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று பீஜிங்கிலிருந்து ஜோகன்ஸ்பெர்க் புறப்பட்டுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டில், இது அவரது 2வது வெளிநாட்டு பயணமாகும். நாளை முதல் 2 நாட்களுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, ‘பிரிக்ஸ் மற்றும் […]

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில், 15 வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங்,
இன்று பீஜிங்கிலிருந்து ஜோகன்ஸ்பெர்க் புறப்பட்டுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டில், இது அவரது 2வது வெளிநாட்டு பயணமாகும்.

நாளை முதல் 2 நாட்களுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, ‘பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் வருகை கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்த வருடத்தின் மாநாட்டில், பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள், மொத்த உலக ஜிடிபியில் 23% மற்றும் மொத்த உலக மக்கள் தொகையில் 42% கொண்டுள்ளதால், இந்த மாநாடு சர்வதேச அளவில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu