நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்கு ஊடுருவ முயன்ற இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய இரண்டு சீனர்கள் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவருக்கு உதவியதாக திபெத் அகதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, உத்தர் பிரதேசத்தின் மகாராஜ்கன்ஸ் மாவட்டத்தில் இந்திய நேபாள எல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி சீனாவை சேர்ந்த இருவர் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்பி படையினர் அவர்களை விசாரணை செய்தனர். அதில் அவர்கள் பெயர் யாங்குமேன் மற்றும் பாக்கியங் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரும் சீனர்கள். அவர்களிடம் சீன பாஸ்போர்ட் இருந்தது. எனினும் இந்தியா வருவதற்கான விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. இதையடுத்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிய திபத்தை சேர்ந்த அகதி லாப்ஸிங் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.