சீனாவில், குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் பாகம் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா, விண்வெளி ஆராய்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தின. லாங் மார்ச் 2 சி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் நிகழும் காமா கதிர் வெடிப்புகளை பற்றி ஆராய்வதற்காக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ராக்கெட் ஏவப்பட்டு சில மணி நிமிடங்கள் கழித்து, அதன் பூஸ்டர் பாகம் எரிந்தபடியே பூமிக்குள் விழுந்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் ராக்கெட் பாகம் விழும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.