சீனாவின் சாங்கே 5 திட்டம் மூலம் நிலவிலிருந்து மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதை ஆராய்ந்த சீன விஞ்ஞானிகள், நிலவின் மணற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
நிலவில் காணப்படும் கண்ணாடி போன்ற வடிவமைப்புகளில், ஹைட்ரேட்டட் மினரல் வடிவங்களில் தண்ணீர் உள்ளதை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிலவின் மேற்பரப்பில் சூரியனின் தாக்கத்தால் தண்ணீர் உருவானதாக அவர்கள் கூறுகிறார்கள். அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம், எதிர்கால நிலவு திட்டங்களுக்கான முக்கிய நுண்ணறிவு மற்றும் ஆதாரங்களை வழங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.