சீனாவின் இரண்டு விண்கலங்கள், DRO-A மற்றும் DRO-B ஆகியவை, பூமியின் சுற்றுப்பாதையில் சிக்கியிருந்தன. இவற்றின் ஏவுதலில் பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், நிலவின் தொலைதூர சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளன.
கடந்த 2024 மார்ச் 13 அன்று லாங் மார்ச் 2C ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலங்கள், சீன அறிவியல் அகாடமி (CAS) இன் சோதனை திட்டத்தின் ஒரு பகுதியாகும். யுவான்செங்-1S மேல்நிலை தளத்தில் ஏற்பட்ட கோளாறு பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், விண்கலத்தின் உந்துசக்தி திறன் மூலம் நிலவுக்குச் செல்லும் சுற்றுப்பாதையை அடைய முடிந்துள்ளது. இந்த வெற்றி, சீனாவின் சிறப்பான விண்வெளி திறன்களை பறைசாற்றுகிறது.