சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை - இங்கிலாந்து

January 3, 2023

இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து தங்களது நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோல, சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள், சீனாவில் இருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்று தேவைப்படும் என்று பிரிட்டன் கடந்த வாரம் […]

இங்கிலாந்து வரும் சீன பயணிகளுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து தங்களது நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோல, சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள், சீனாவில் இருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்று தேவைப்படும் என்று பிரிட்டன் கடந்த வாரம் கூறி இருந்தது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். கொரோனா உறுதியானால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று அறிக்கையின் மூலம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 648

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu