நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் பதவியேற்றார்.
நியூசிலாந்தின் 42வது பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் நேற்று பதவியேற்றார். இவருக்கு வயது 53. நியூசிலாந்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற்றது. அதில் கிறிஸ்டோபரின் தேசிய கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. அதையடுத்து அவர் இரண்டு சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துள்ளார். தலைநகர் வெலிங்டனில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லக்சனுக்கு கவர்னர் ஜெனரல் சிண்டி பதவிப்பிரமாணம் செய்தார். பின்னர் பேசிய பிரதமர் இன்று புதிய அமைச்சரவை கூட்டம் கூட்ட உள்ளார் எனவும் முதல் 100 நாள் திட்டம் குறித்து விவாதிப்பார் என்றும் கூறினார்.