சிப்லா நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாகமற்ற இயக்குநருமான திரு. எம் கே ஹமீட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3, 2024 அன்று தனது ராஜினாமா கடிதத்தை எம் கே ஹமீட் அனுப்பியுள்ளார். வரும் அக்டோபர் 29, 2024 அவரது இறுதி பணி நாளாக இருக்கும். சிப்லாவில் பணியாற்றிய காலத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்வதாகவும் ஊழியர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.