சிஸ்கோ நிறுவனத்தில் 6000 பேர் பணி நீக்கம்

August 16, 2024

சிஸ்கோ, அதன் உலகளாவிய பணியாளர்களில் 7% பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை US செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் (SEC) சமீபத்தில் அறிவித்துள்ளது. இது, பிப்ரவரியில் சுமார் 4,000 ஊழியர்களைப் பாதித்த முந்தைய பணிநீக்கத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஸ்கோ அறிவித்துள்ள பணிநீக்கங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் $1 பில்லியன் செலவு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் $700 முதல் $800 மில்லியன் வரை நிதியாண்டின் முதல் காலாண்டில் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில், […]

சிஸ்கோ, அதன் உலகளாவிய பணியாளர்களில் 7% பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை US செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் (SEC) சமீபத்தில் அறிவித்துள்ளது. இது, பிப்ரவரியில் சுமார் 4,000 ஊழியர்களைப் பாதித்த முந்தைய பணிநீக்கத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஸ்கோ அறிவித்துள்ள பணிநீக்கங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் $1 பில்லியன் செலவு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் $700 முதல் $800 மில்லியன் வரை நிதியாண்டின் முதல் காலாண்டில் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில், AI ஸ்டார்ட்அப்களில் $1 பில்லியன் மற்றும் AI உள்கட்டமைப்பு மற்றும் இணைய பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்த என்விடியாவுடன் கூட்டுறவு ஆகியவற்றில் சிஸ்கோ ஈடுபட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு நோக்கிய நகர்வில் இந்த பணி நீக்க செய்தி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu