சிட்டி வங்கி குழுமத்தை மூன்றாக பிரிக்க நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேன் பிரேசர் திட்டமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு ஃபைனான்சியல் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ளது.
சிட்டி குழுமத்தின் முக்கிய வர்த்தக பிரிவான Institutional Clients Group, 3 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது. முதலாவது, முதலீட்டு மற்றும் கார்ப்பரேட் வங்கி பிரிவு (investment and corporate banking), இரண்டாவது சர்வதேச சந்தை நடவடிக்கைகள் (global markets) பிரிவு, மூன்றாவது பரிவர்த்தனை சேவைகள் (transaction services) பிரிவு. சிட்டி குழுமத்திற்கு அதிக வருவாய் பெற்று தரும் Institutional Clients Group பிரிவின் தலைவர் பாகோ எப்பாரா, விரைவில் பதவி விலக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிட்டி வங்கியின் மிக முக்கிய வர்த்தக நடவடிக்கையாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.