மெக்சிகோ தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக 62 வயதான கிளாடியா பதவியேற்கவுள்ளார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷேன்பாம் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம், 200 ஆண்டுகள் கடந்த மெக்சிகோ தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக 62 வயதான கிளாடியா பதவியேற்கவுள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் மெக்சிகோவின் அதிபராக தொடர்வார். கிளாடியா, உலகளவில் புகழ்பெற்ற பருவநிலை விஞ்ஞானி. 2007-ஆம் ஆண்டு 'அமைதிக்கான நோபல் பரிசை' வென்றவர். 2018-ஆம் ஆண்டு மெக்சிகோ மாநகரின் முதல் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2000 முதல் 2006 வரையிலான காலத்தில், நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.