பங்குச்சந்தையில் சரிவு - சென்செக்ஸ் 240 புள்ளிகள் வீழ்ச்சி

August 31, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 255.84 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 93.66 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச் சந்தை 64831.41 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 19253.8 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன. அதானி குழுமத்திற்கு எதிரான OCCRP அறிக்கை, இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரும் தாக்கத்தை […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 255.84 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 93.66 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச் சந்தை 64831.41 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 19253.8 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.

அதானி குழுமத்திற்கு எதிரான OCCRP அறிக்கை, இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அதானி குழும பங்குகளும் இன்று கடும் சரிவை பதிவு செய்துள்ளன. மேலும், பிபிசிஎல், ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எஸ் பி ஐ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, என்டிபிசி போன்ற அனேக நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. அதே வேளையில், மாருதி சுசுகி, சிப்லா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டைட்டன் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu