மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக இந்த சிலையை திறந்து வைத்தார்.
கலைஞர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளான இன்று திறக்கப்பட்ட இந்த சிலைக்கு ஏராளமான பொதுமக்கள், கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னையில் இருந்து முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருச்சியில் நடைபெற்ற சிலைதிறப்பு விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.