உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட உயர்கல்வி கூட கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஆய்வகங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மையம் கருத்தரங்க மையம் மற்றும் செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை கட்டி வந்தனர். இதற்காக ரூபாய் 87 கோடியே 76 லட்சத்து 96 ஆயிரம் செலவில் இவை அனைத்தும் கட்டப்பட்டிருந்தது. இதனை இன்று காலை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார் இதில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.