பிரேசிலில் உள்ள சுறா மீன்கள் கொக்கைன் போதையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோவிற்கு அருகே உள்ள கடற்கரையில் சுறா மீன்கள் கொக்கைன் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிருந்து எடுக்கப்பட்ட 13 பிரேசிலிய சுறா மீன்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இவற்றின் கல்லீரல்களில் கொக்கைன் பாதிக்கப்பட்டு இருப்பதை அப்போது கண்டறிந்தனர். போதைப் பொருள் ஆலை அல்லது போதைப் பொருள் பயன்படுத்துபவரின் கழிவுகள் மூலமாகவோ கடல் நீரில் கலந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடலில் கொட்டப்படும் கொக்கைன்களும் கூட ஒரு ஆதாரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறைவான அளவில் தான் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் கடல் சுற்றுச்சூழல் நச்சுவியலாளர் சாரா கூறுகையில், இது மிகவும் கவலைக்குரிய நிகழ்வாகும் என்றார்.