எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் அனுப்பிய சூப்பர் நோவா தகவல்கள்

January 12, 2024

எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை கடந்த ஜனவரி 1ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள் தற்போது சூப்பர் நோவா குறித்த தகவல்களை அனுப்பி உள்ளது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம், கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள், சூப்பர் நோவா போன்றவற்றை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதற்காக, இந்த செயற்கைக்கோளில் 2 நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதலாவது, விண்மீன்களில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களை அளவீடு செய்து ஆய்வு பணிகளில் ஈடுபட உதவுகிறது. இரண்டாவது, எக்ஸ் […]

எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை கடந்த ஜனவரி 1ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள் தற்போது சூப்பர் நோவா குறித்த தகவல்களை அனுப்பி உள்ளது.

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம், கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள், சூப்பர் நோவா போன்றவற்றை குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதற்காக, இந்த செயற்கைக்கோளில் 2 நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதலாவது, விண்மீன்களில் இருந்து வெளியேறும் எக்ஸ் கதிர்களை அளவீடு செய்து ஆய்வு பணிகளில் ஈடுபட உதவுகிறது. இரண்டாவது, எக்ஸ் கதிர்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளை கண்காணிக்க உதவுகிறது. கடந்த ஜனவரி 5ஆம் தேதி, இந்த கருவியின் செயல் திறன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கேசியோபியா ஏ என்ற சூப்பர் நோவாவில் இருந்து வெளிப்பட்ட ஒளியை எக்ஸ்போசாட் படம் பிடித்து அனுப்பியது. எக்ஸ்போசாட் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், சூப்பர் நோவாவிலிருந்து வெளிப்படும் ஒளியில், சிலிக்கான், மெக்னீசியம், கால்சியம், சல்பர், இரும்பு போன்ற தனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu