தெற்கு ரயில்வே தேனி ரயில் நிலையத்திலிருந்து மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு சரக்கு போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மதுரை ரயில்வே கோட்டத்தின்
19 -வது சரக்கு முனையமாக உள்ளது. இந்த சரக்கு அலுவலகம் காலை 6:00 மணி முதல் இரவு 10 மணி வரை எல்லா நாட்களிலும் செயல்பட இருக்கின்றது. இங்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி தவிர மற்ற பொருள்களை ஏற்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் மதுரை திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை மழைக்காலங்களில் தடை இன்றி அனுப்ப இயலும். ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை கையாள முடியும். மேலும் இதற்கென தனி ரயில் பாதை அமைப்பு உள்ளதால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கென 5 கோடி செலவில் கழிப்பிடம், ஆண்,பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வறைகள், லாரிகளில் ஏற்றிச் செல்ல தரமான தார் சாலை, போதுமான விளக்கு வசதி ஆகிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது மதுரை போடிநாயக்கனூர் மின்மயமாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக விரைவில் மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.