தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2,89,591 விண்ணப்பங்களில் 1,22,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது, இதில் 80,050 புதிய ரேஷன் அட்டைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. மேலும், 99,300 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மற்றும் விரைவில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அட்டைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.