காசிமேடு படகுகளில் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தொலைத்தொடர்பு கருவி

காசிமேடு மீனவர்களின் 600 படகுகளில் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தொலைத்தொடர்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதிநவீன தொலைத்தொடர்பு டிரான்ஸ்மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மீனவர்களின் படகுகளில் பொருத்தும்போது அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு […]

காசிமேடு மீனவர்களின் 600 படகுகளில் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தொலைத்தொடர்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதிநவீன தொலைத்தொடர்பு டிரான்ஸ்மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மீனவர்களின் படகுகளில் பொருத்தும்போது அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரோவின் இந்த தொழில்நுட்பம் முதற்கட்டமாக 1,400 படகுகளில் இணைக்கப்படும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் இதுவரை 900 டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu