மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தந்ததை தொடர்ந்து, கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர், மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.