ஒடிசாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் பாலசோர் நகரில் உள்ள இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குள்ள குறிப்பிட்டதொரு சமூகத்தினர் விலங்குகளை பலியிட்டு சாலையில் ரத்தத்தை வழிந்து ஓட விட்டதாக குற்றம் சாட்டி மற்றொரு சமூகத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்தவர்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் பாலசோர் நகரில் உள்ள இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குள்ள குறிப்பிட்டதொரு சமூகத்தினர் விலங்குகளை பலியிட்டு சாலையில் ரத்தத்தை வழிந்து ஓட விட்டதாக குற்றம் சாட்டி மற்றொரு சமூகத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்தவர்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். மேலும் நிலையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ஊரளவு உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடைகள் வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu