தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயண அறிவிப்பை மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் 1.5 கோடி பெண்கள் விண்ணப்பித்த நிலையில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒரு கோடி பெண்களுக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் பலரது வங்கி கணக்குகளுக்கும் 15-ம் தேதி முதல் பணம் செலுத்தப்பட்டு வந்தது. பணம் கிடைக்காத பெண்கள் பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான தீர்வை தேடி யாரை அணுக வேண்டும் என விசாரித்தபடி இருந்தனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அதற்கான காரணம் என்ன என கூறப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பல பெண்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் மணி ஆர்டரில் மகளிர் உரிமை தொகையை கொடுத்து வருகின்றனர். இதனால் ஏமாற்றத்தில் இருந்த பல பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விண்ணப்பித்த மக்கள் ஆதார் விவரங்களில் தவறு இருந்தால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த முடியாது அதற்கு மாற்று ஏற்பாடாக தமிழக அரசு மணி ஆர்டரில் பணம் கிடைக்க ஆவணச் செய்துள்ளது. இதனை பல பெண்கள் பாராட்டி வருகின்றனர்.