காங்கோவில் சிறை உடைப்பு - 129 கைதிகள் பலி

September 3, 2024

கின்ஷாசா நகரில் உள்ள காங்கோவின் மக்காலா சிறைச்சாலையில் தப்பிக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 129 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 1,500 கைதிகளுக்கு வடிவமைக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில், 12,000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்களன்று அதிகாலை கைதிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது, 24 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நள்ளிரவு முதல் துப்பாக்கிச் சூடு நடந்ததாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. […]

கின்ஷாசா நகரில் உள்ள காங்கோவின் மக்காலா சிறைச்சாலையில் தப்பிக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 129 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சுமார் 1,500 கைதிகளுக்கு வடிவமைக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில், 12,000க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்களன்று அதிகாலை கைதிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது, 24 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நள்ளிரவு முதல் துப்பாக்கிச் சூடு நடந்ததாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், ஆரம்பத்தில் 2 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu