தெலுங்கானாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளது. தெலுங்கானாவில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல முக்கிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வேட்பாளர்கள் […]

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளது.

தெலுங்கானாவில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல முக்கிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் தெலுங்கானாவில் உள்ள சில இடங்களில் வேட்பாளர்கள் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படவும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu