காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆன உம்மன் சாண்டி விருதுக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரளா முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த ஆண்டு உயிர் இழந்தார். இந்நிலையில் அவரது பெயரில் நிறுவப்பட்டுள்ள உம்மன் சாண்டி பவுண்டேஷன் சார்பில் பொது சேவை விருதுகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த முதல் ஆண்டிற்கான விருதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர் பொதுமக்களின் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதில் ஒரு லட்சம் பரிசு தொகையும், விருதுச் சிற்பமும் வழங்பட உள்ளது.