குழாய் மூலம் வீடுகளுக்கு கேஸ் இணைப்பு - புதுச்சேரி

புதுச்சேரியில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கேஸ் இணைப்பு வழங்குவதற்கு 700 கோடி ரூபாயில் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை, டெல்லி மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதன் வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். தற்போது புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை […]

புதுச்சேரியில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கேஸ் இணைப்பு வழங்குவதற்கு 700 கோடி ரூபாயில் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை, டெல்லி மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதன் வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். தற்போது புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023 திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய நகரங்களில் ரூபாய் 700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக புதுவை அரசின் தலைமை செயலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu