கடலுக்கு அடியில் மின் இணைப்பு திட்டம் உருவாக்க பரிசீலனை

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ரூபாய் 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் கடலுக்கு அடியில் மின்சார வழங்கும் இணைப்பை அமைப்பதற்கு பரிசீலனை நடைபெற்று வருவதாக அந்நாட்டு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாட்டிற்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமத்திய நகரமான அனுராதாபுரத்தையும் இந்தியாவின் […]

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ரூபாய் 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் கடலுக்கு அடியில் மின்சார வழங்கும் இணைப்பை அமைப்பதற்கு பரிசீலனை நடைபெற்று வருவதாக அந்நாட்டு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாட்டிற்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் வகையில் செயல்பட்டு வருவதாக
தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமத்திய நகரமான அனுராதாபுரத்தையும் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையும் நேரடி மின் இணைப்பு மூலம் இணைக்கும் திட்டம் இந்தியாவில் 130 கிலோ மீட்டர் நிலப்பரப்பு போக்குவரத்து பாதைக்கு பிறகு வடகிழக்கு இலங்கையில் உள்ள மன்னாரில் கடலுக்கு அடியில் ஒரு பாதை உருவாக்கப்படும். இது தொடர்பாக இலங்கையின் ஆற்றல் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலர் கூறுகையில் இரு நாடுகளுக்கு இடையே கேபிள் மூலம் கடலுக்கடியில் மின்சாரம் செல்லும் இணைப்பு அமைப்பதற்காக சமீபத்திய கூட்டத்தை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்திற்காக 120 கோடி டாலர் செலவாகும். இலங்கை நிதி பங்களிப்பு குறித்த விவாதங்களும் இனி நடத்தப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu