நோபல் பரிசு பெற்ற முகமது யூனீஸ்க்கு தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வங்காளதேசத்தில் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. புதிய அரசு அமைக்க அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் முகமது யூனுஸ் என்ற நிபுணரை அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இவர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டவராக கருதப்படுகிறார். மாணவர் இயக்கத்தின் பிரதிநிதிகள் நகித் இஸ்லாம், அபூபக்கர், ஆசிப் முகமது ஆகியோர் முகமது யூனிசை அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.