கோபா அமெரிக்கா கால் பந்து தொடரில் கொலம்பியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
அமெரிக்காவில் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் அறை இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த தொடரின் முதல் அரை இறுதி சுற்றில் அஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதியதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அரையிறுதி சுற்றில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் மோதியது. அதில் கொலம்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிற்கு முன்னேறியுள்ளது. அதன்படி இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ளது