டென்மார்க்கில் 400 வருடங்கள் பழமையான பங்குச் சந்தை கட்டிடத்தில் தீ விபத்து

April 16, 2024

டென்மார்க் நாட்டின் முன்னாள் பங்குச் சந்தை கட்டிடம் 400 வருடங்கள் பழமையானதாகும். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Copenhagen இன் முக்கிய அடையாளமாக திகழும் பங்குச் சந்தை கட்டிடம், தீ விபத்து காரணமாக முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. கடந்த 1970 கள் வரையில் டென்மார்க் நாட்டின் பங்குச்சந்தை மையமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம், தற்போது, அந்நாட்டின் வர்த்தகத்துறை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தை […]

டென்மார்க் நாட்டின் முன்னாள் பங்குச் சந்தை கட்டிடம் 400 வருடங்கள் பழமையானதாகும். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Copenhagen இன் முக்கிய அடையாளமாக திகழும் பங்குச் சந்தை கட்டிடம், தீ விபத்து காரணமாக முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. கடந்த 1970 கள் வரையில் டென்மார்க் நாட்டின் பங்குச்சந்தை மையமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம், தற்போது, அந்நாட்டின் வர்த்தகத்துறை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் நகரின் சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரையாகிய நாளின் ஐந்தாம் ஆண்டு நினைவு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மறுநாளே, டென்மார்க்கில் இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu