கள்ளக்குறிச்சி கள்ளசாராய உயிரிழப்பை தொடர்ந்து மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு.விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சானிடைசர் வாங்க இனி அடையாள அட்டை கட்டாயம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாராய சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்கள் வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி தனிநபர்களுக்கு சானிடைசர் அதிக அளவு விற்கும் மருந்து கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்கஹால்,எத்தனால் மூலப்பொருட்களாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர் ,ஹேண்ட் வாஷ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் மருந்து கடைகளுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது