மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஆனது ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது. அதில் மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்து ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.