பிப்பர்ஜாய் புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்கிறது.
அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மரங்களும் ஏராளமான மின்சாரக் கம்பங்களும் முறிந்து கீழே விழுந்துள்ளன.
இந்நிலையில் குஜராத்தில் கரையைக் கடந்த பிப்பர்ஜாய் புயல், ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக ராஜஸ்தானின் ஜலோர், பார்மெர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 60-70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் இவ்விரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அந்த மாவட்டங்களில் காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.