குஜராத்தில் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் தாழ்வான பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் 29 பேர் பலியாகியுள்ளனர், மேலும் சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி, 'அஸ்னா' என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்கிறது. எனவே, குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், குறைந்த அளவிலான மழை மற்றும் வெள்ளம் அங்குள்ள பல பகுதிகளை பாதிக்கின்றது.