யாகி புயல் பாதிப்பு காரணமாக மியான்மருக்கு இந்தியா 2 ஆம் கட்ட நிவாரண பொருள்களை அனுப்பியுள்ளது.
யாகி புயல் பிலிப்பைன்சில் உருவாகி, வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியுள்ளது. இந்த புயலால், வியட்நாமில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மியான்மரிலும், புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 74 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா, இந்த கடுமையான இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்தியா, மியான்மர் மற்றும் பிற நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டத்தின் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கிறது. அதன்படி , மியான்மருக்கு 2 ஆம் கட்டமாக 32 டன் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது, இதில் ஜெனரேட்டர்கள், தற்காலிக டென்டுகள் மற்றும் சூரிய விளக்குகள் உள்ளன.