சீனாவின் மின்சுவான் நகரில் உள்ள பார்பிக்யூ உணவகம் ஒன்றில், நேற்று இரவு 8 மணி அளவில், எரிவாயு உருளை வெடித்து, கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டிராகன் படகு திருவிழாவை ஒட்டி அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், உணவகத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது. எனவே, இந்த விபத்தில் உணவகத்தில் இருந்த 31 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் பாதிப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து நேர்ந்த பிறகு, அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.