நாசாவில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தலைமை அதிகாரி பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விண்வெளித் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனித குலத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களை தீட்டுவது அவசியமாகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்டு, நாசாவில் இந்த புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் டேவிட் சல்வாங்கினி நாசாவின் செயற்கை நுண்ணறிவு தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த தலைமை தகவல் அதிகாரி பொறுப்பையும் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார். தொழில்நுட்பத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட டேவிட், கடந்த ஜூன் மாதத்தில் நாசாவில் இணைந்தார்.