சாட் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 54 பேர் பலியாகினர்.
மத்திய ஆப்பிரிக்காவில் சாட் நாடு அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்ள டிபெஸ்டி எனும் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 50,000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். கன மழை தொடர்ந்து நீடிப்பதால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.