சவுதி அரேபியாவில் வெப்ப பாதிப்பு காரணமாக 1300 ஹஜ் பயணிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சவுதி சுகாதாரத்துறை அமைச்சர் பகத் ஜலஜெல் கூறுகையில், ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளின் இறப்பு எண்ணிக்கை 1300-ஐ தாண்டி உள்ளது. இதில் 83 சதவீதம் பேர் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். இவர்கள் போதுமான தங்கும் இடம் மற்றும் பிற வசதிகளின்றி சூரிய ஒளியின் கீழ் நீண்ட நேரம் நடந்துள்ளனர். மெக்காவுக்கு அனுமதி இல்லாமல் வந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் யாத்திரிகர்கள் உட்பட சுமார் 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்திரிகர்கள் இந்த ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக மெக்காவில அதிக வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஹஜ் பயணிகள் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.