பிலிபைன்ஸ் சுரங்க நிலச்சரிவில் 68 போ் பலி

February 13, 2024

பிலிபைன்ஸ் நாட்டில் தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 68 பேர் பலியாகினர். பிலிப்பைன்சில் கடந்த வாரம் தங்க சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 68 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, மின்ட்நாவ் மாகாணத்தில் உள்ள மசாரா கிராமத்தில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்த சுரங்க தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் மீட்பு […]

பிலிபைன்ஸ் நாட்டில் தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 68 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்சில் கடந்த வாரம் தங்க சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 68 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, மின்ட்நாவ் மாகாணத்தில் உள்ள மசாரா கிராமத்தில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்த சுரங்க தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து அறிந்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுவரை இதில் 68 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 51 பேரை காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu