கிழக்கு சிரியாவில் உள்ள டிர் எஸ் சோர் பகுதியில் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக சிரியாவின் பாதுகாப்புத்துறை கூறுகிறது. ஆனால், அமெரிக்கா இதனை மறுத்துள்ளது. இந்த நிலையில், வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 13 பொது மக்களும், 19 ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவில் செயல்பட்டு வரும் கிளர்ச்சி குழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. இந்த நிலையில், நேற்று இரவு வான்வழி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிப் படையை சேர்ந்த முக்கிய தளபதி, அவரது 2 மெய் காப்பாளர்கள் மற்றும் அந்தக் குழுவை சேர்ந்த 9 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.