20 ஆண்டுகளுக்கு மேலான மின்மாற்றிகளை மாற்ற முடிவு

20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள மின்மாற்றிகளை மாற்றுவதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகரித்து வருகின்றன. அதில் உள்ள மின்கம்பிகளில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் வெப்பம் காரணமாக அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த மின்மாற்றிகளை மாற்றுவதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1949 நிலையங்களில் 4000 மின் மாற்றிகள் உள்ளன. எனவே இவற்றை […]

20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள மின்மாற்றிகளை மாற்றுவதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகரித்து வருகின்றன. அதில் உள்ள மின்கம்பிகளில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் வெப்பம் காரணமாக அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த மின்மாற்றிகளை மாற்றுவதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1949 நிலையங்களில் 4000 மின் மாற்றிகள் உள்ளன. எனவே இவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்ற ஒரு மின்மாற்றிக்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும் எனவும், துணைமின் நிலையங்கள் உள்ள மின் மாற்றிகளை மாற்ற 30 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும் எனவும், தற்போது இருநூறு துணை நிலையங்களுக்கு தேவையான மின்மாற்றிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu